SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, October 30, 2016

"தமிழ் தாத்தா" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்

"தமிழ் தாத்தா" .வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்
 
டி.என்.பி.எஸ்.சி யின் புதிய பாடத்திட்டத்தின் படி தமிழ் அறிஞர், "தமிழ் தாத்தா" .வே.சா அவர்களைப் பற்றிய கேள்விகள் இடம்பெறும். அதற்குப் பயன்படும் விதமாக தமிழறிஞர் - தமிழ்தாத்தா .வே.சா அவர்களைப் பற்றிய பயனுள்ள தகவல் குறிப்புகளை இங்கு காண்போம். இவருடைய முழுமையான பெயர் உத்தமதானபுரம் வேங்கட சுப்பையர்  மகனார் சாமிநாதன் என்பதாகும். அவரைப் பற்றிய மேலதிக விபரங்களை கேள்வி-பதில்கள் வடிவில் பார்க்கலாம்.
  • .வே. சாமிநாதய்யர் பிறந்த ஊர் எது?
  • திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உத்தமதானபுரம்
  • .வே.சா அவர்களின் ஆசிரியர் யார்?
  • மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  • .வே.சா. விரிவாக்கம் என்ன?
  • உத்தமதானபுரம் வேங்கட சுப்பையர் மகன் சாமிநாதன்
  • .வே.சா பிறந்த ஆண்டு ?
  • 19.2.1855
  • .வே.சா இயற்கை எய்திய ஆண்டு?
  • 28.4.1942
  • .வே.சா அவர்களின் சிறப்பு பெயர்
  • 'தமிழ் தாத்தா'
  • .வே.சா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுதிய இதழின் பெயர்?
  • ஆனந்த விகடன்
  • .வே.சா அவர்களின் தமிழ்பணியைப் பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள்?
  • சூலியஸ் வின்சோன், ஜி.யு.போப்
  • .வே.சா அவர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் மத்திய அரசு அஞ்சல் தலையை வெளியிட்ட ஆண்டு
  • 2006.
  • .வே.சா நூல்நிலையம் செயல்பட்டுகொண்டிருக்கும் நகரம்..
  • சென்னையில் உள்ள பெசன்ட்நகர்
  • இந்நூல் நிலையம் அமைக்கப்பெற்ற ஆண்டு 1942.
.வே.சா அவர்கள் பதிப்பித்த நூல்களின் பட்டியல்:
  1. எட்டுத்தொகை நூல்கள் - 8
  2. பத்துப்பாட்டு - 10
  3. சீவக சிந்தாமணி - 1
  4. சிலப்பதிகாரம் - 1
  5. மணிமேகலை - 1
  6. புராணங்கள் - 12
  7. உலா - 9
  8. கோவை - 6
  9. தூது - 6
  10. வெண்பா நூல்கள் - 13
  11. அந்தாதி - 3
  12. பரணி - 2
  13. மும்மணிக்கோவை - 2
  14. இரட்டை மணிமாலை - 2
  15. இதரபரபந்தங்கள் - 4



No comments:

Post a Comment